Friday, May 7, 2010

PANNAI KULAM

பண்ணை குலம்

பண்ணை குலம் என்ற பெயர் பண்ணைக்கீரை வழியாக ஏற்பட்ட பெயராகும். காவிரி தென்கரை நாடான குளித்தலை வட்டாரத்தில் வாழ்ந்த பண்ணை குலத்தினர் உறையூர் சோழ மன்னரின் குடி மக்களாகவும், படை மக்களாகவும் சிறப்புடன் வாழ்ந்தனர். வால சுந்த்தர கவியின் கொங்கு மண்டல சாதகப்பாடல் ஒன்று 1051 ல் குளித்தலை வட்டாரம் ஆத்திய நல்லூரில் சாத்தந்தை குலத்தாரும் பண்ணை குலத்தாரும் சிறப்புடன் வாழ்ந்த தோரணையைக் குறித்துள்ளது.
அருங்கரை அம்மனை வழிபடும் பண்ணை குலத்தினர் கரூர் வட்டாரத்தில் கூடலூர், கைலாசபுரம், ஊத்துக்கரைப்பாளையம் ஊர்களில் அதிகமாகவும், மற்ற ஊர்களில் பரவலாகவும் வாழ்ந்து வருகின்றனர்.
நாமக்கல் கீரம்பூர் எட்டுக்கை அம்மனை வழிபடும் பண்ணை குலத்தினர் கரூர் வங்கப்பாளையம், நெடுங்கூர் , நெரூர், நமக்கல், ராசிபுரம், வீரராக்கியம், ஆகிய ஊர்களில் அதிகமாகவும், மற்ற ஊர்களில் பரவலாகவும் வாழ்ந்து வருகின்றனர்.
கொங்கு வரலாற்றை கூறும் இக்கொங்கு மண்டல சதகத்தை வாலசுந்தரக் கவிஞர் இயற்ற அவருக்கு உறுதுனையாக இருந்தவர்கள் பண்ணை குலத்தார் ஆவர்.இதனால், பாயிரத்தில் " படிக்கவே பொருட் சாத்தந்தைப் பண்ணை கோன் வெண்ணை நல்லூர் கொடுத்திரு மிரணம் வாரிக் கொங்கு செய் சததந்தானே " என்று கவிஞர் குறிப்பிட்டுள்ளர்.
இவ்வாறே கம்பர் ராமாயணம் பாடுவதற்க்கு உறுதுணையாய் இருந்து ஊக்குவித்தவர் பண்ணை குல வேளாளர் சடையப்ப வள்ளல் என்றும் , கம்பராமாயணம் முடி சூட்டுப் படலத்தில் இராமனுக்கு முடிசூட்டும் போது கிரீடத்தை பண்ணை குல வேளளர் மரபினோர் எடுத்து கொடுக்க வஷிஷ்டன் அணிவித்தான் என்றும் கம்பர் கூறுகிறார்.

No comments:

Post a Comment