Friday, May 7, 2010

எட்டுக்கை அம்மன் - சிறப்பு


எட்டுக்கை அம்மன்னின் சிறப்பு

எட்டுக்கை அம்மன் எனும் சிறப்பு கரங்களினாலேயே காரண பெயர் பெற்று விளங்குகிறது. இது அன்னையின் திருக்கோலம். பராசக்தியின் பல்வேறு வடிவங்களில் கொற்றவை எனும் காளி, துர்க்கை, போன்ற தெய்வங்கள் வட திசையை நோக்கி குடி கொள்பவர்கள். இந்த வகையில் தீமையை அழித்து நன்மையை நிலை நிறுத்தும் தேவி வடிவங்களில் ஒன்றே அன்னை எட்டுக்கை அம்மன்.
இது போன்ற மற்ற தெய்வ வடிவங்களில் அமைய பெற்றிருக்கும் அசுரனின் வடிவம் அசுரனை காலால் மிதிப்பது போன்றும், அல்லது நீண்ட சூலாயுதத்தால் சம்ஹாரம் செய்வது போன்றும் அமைந்திருக்கும். ஆனால் , எட்டுக்கை அம்மனின் சிறப்பு அசுரனை அடியோடு சாய்த்து வெற்றி வாகை சூடி அருள் வழங்கும் காட்சியாக உள்ளது.
மேலும் சிவனில் இவள் பாதி என உணர்த்தும் வகையில் இடது கரத்தில் விஸ்மயா ஹஸ்த்தம் எனும் வியப்பினை ஓட்டும் முத்திரையில் அக்னி, வில், மணி, கபாலம் இவைகளையும் , வலது கரத்தில் டமருகம் ( உடுக்கை ), எறி சூலம், கட்கம் ( சிறிய கத்தி ), வேல், இவைகளையும் தனது எட்டு கரத்தில் தாங்கி அருள்பாலிக்கிறாள்.
அன்னையின் வலபுற காதில் மகர குண்டலமும், இடபுற காதில் பத்திர குண்டலமும் அணிந்துள்ளது ஆண், பெண், சரி பாதி என்ற தோற்றத்தை நினைவு கூர்கிறது.

ஜுவாலா கேசம் ( அக்னி கூந்தல் ) கொண்ட அன்னை காளி தேவியின் வடிவமே ஆயினும் பரமஹம்சர் தேவி அன்பின் வடிவமே என்கிறார்.

வீரத்தின் அடையாளமாக அன்னை உத்தங்குடிகா ஆசனம் இட்டு தனது வலது பாதத்தை பீடத்தின் மேலும், இடது பாதத்தை ஊன்றியும் அமைந்தவாறு வடிவமைத்துள்ளது சிற்ப்பியின் கலைத்திறனையும், சாஸ்த்திர ஙுனுக்கத்தையும் நன்கு வெளிப்படுத்துகிறது.

1 comment: